இலங்கையில் சமத்துவமாக தடுப்பூசி வழங்குதல் சார்ந்த பல்வேறுபட்ட தாக்கங்கள்: மார்ச் 2022

கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அணுகுதல் மற்றும் தடுப்பூசி மீதான நம்பிக்கை தொடர்பாக உலகெங்கிலும் உள்ள பல்வேறு இனக் குழுக்களுக்கிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை கோவிட்-19 வெளிச்சித்திற்குக் கொண்டு வந்துள்ளது. பின்னணியாகச் செயற்படும் இக் காரணிகளுக்கு எதிராக வெரிட்டே நிறுவனத்தின் ஊடகத் குழுவினால்; கோவிட்-19 தடுப்பூசி மீதான நம்பிக்கை, கோவிட-19; தடுப்பூசிக்கு உள்ள வரவேற்பு, தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அணுகுதல் என்னும் விடயங்களில் இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இரண்டு பகுதிகளாக ஓர் ஆய்வை நடாத்தி உள்ளது. இவ் ஆய்வானது, தடுப்பூசி சமத்துவத்தின் மீதான தாக்கம் (DIVE) நிகழ்ச்சித் திட்டம் 2021-2022, இன் ஒரு பகுதியாக “சர்வதேச சிறுபான்மை உரிமைகள் குழுவுடன்”; இணைந்து வெரிட்டே நிறுவனத்தின் ஊடகக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆய்வானது, இரு பகுதிகளாக நடாத்தப்படும் ஆய்வுத் தொடரின் இறுதிப் பகுதியாகும். இவ் அறிக்கையானது, இரண்டு பகுதி ஆய்வின் இரண்டாவதும் இறுதியானதுமான பகுதியாகும்.

வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் ஊடகத் குழுவினால் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கையானது, 2021 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல், 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி குறித்தான நம்பிக்கை, தடுப்பூசி ஏற்றல், மற்றும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய தன்மை என்பவற்றுடன் தொடர்புடைய சமூக ஊடகங்களில் இடம்பெற்ற உரையாடல்களைப் பகுப்பாய்வு செய்துள்ளது.

ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் தடுப்பூசி சமத்துவத்தின் மீதான தாக்கம் (DIVE) நவம்பர் 2021 எனும் தலைப்பில வெளியிடப்பட்டது. இவ் இரண்டாவது அறிக்கையானது, இலங்கையில் உள்ள பல்வேறு இனக் குழுக்களுக்கிடையே கோவிட்-19 தடுப்பூசி மீதான நம்பிக்கை, கோவிட் தடுப்பூசிக்கு உள்ள வரவேற்பு, தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அணுகுதல் என்னும் விடயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக நேருக்கு நேராக நடாத்தப்பட்ட ஆய்வுகளில் பிரதானமாக அவதானிக்கக் கூடியதாகக் காணப்பட்ட விடயங்களைத் தொகுத்து சுருக்கமாக எடுத்துரைக்கின்றது. சமூக ஊடகங்களை உபயோகிப்பவர்களுக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல்களை பகுப்பாய்வு செய்து கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கி எழுதப்பட்ட முதலாவது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை ஆய்வு செய்யும் நோக்கத்தில் குறிப்பிட்ட விடயங்களை முக்கோணமாகப் பிரித்து இரண்டாவது ஆய்வு நடாத்தப்பட்டது. இவ் ஆய்வானது, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்É இலங்கையில் உள்ள 22 மாவட்டங்களில் 2இ476 பதில் வழங்குநர்கள் மத்தியில் நடாத்தப்பட்டது. கோவிட்-19 தடுப்பூசி மீதான நம்பிக்கை, தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தொடர்பான தவறான தகவல்கள், இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசியை வழங்கும் நடைமுறையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதான நம்பிக்கை என்னும் விடயங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்ட பிரதான 10 விடயங்களில் இவ் அறிக்கை முக்கிய கவனம் செலுத்துகின்றது.

மேலும், இவ் அறிக்கையானது, இலங்கையில் காணப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி குறித்தான தவறான தகவல்களையும் அவநம்பிக்கையையும் எதிர்த்து வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் ஊடகக் குழுவினால்; நடாத்தப்பட்ட ஒன்லைன் பிரச்சாரத்தைப் பற்றியும் தெளிவுபடுத்துகின்றது. சமூக ஊடகங்களில் இடம்பெற்ற உரையாடல்களைக் கண்காணிப்பதன் மூலமும், நேருக்கு நேரான ஆய்வுகள் மூலமும் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பிரச்சாரக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டது. கோவிட்-19 தடு;ப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டிய குழுக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான நம்பிக்கையை ஊக்குவிப்பதற்கும் பிரச்சார முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Visited 19 times, 1 visit(s) today
Close