Written by 12:01 pm Verité in the News Views: 13

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட செயல்திறன் குறித்த வெளிப்படைத்தன்மை மேம்பட்டுள்ளது – வெரிட்டே ரிசர்ச்

Published by Virasekari

2024 வரவு செலவுத் திட்டத்துடன் பல துணை ஆவணங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் தற்போதைய சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் வெளிப்படைத்தன்மை நவம்பர் மாதத்தில் மேம்பட்டுள்ளது என்று வெரிட்டே ரிசர்ச்சின் ‘IMF கண்காணிப்பான்’இன் சமீபத்திய புதுப்பிப்பு தெரிவிக்கிறது.

முன்பு ‘அறியப்படாதவை’ என வகைப்படுத்தப்பட்ட ஆறு உறுதிமொழிகளின் செயல்திறன் குறித்த தகவல்களை தொடர்புடைய துணை ஆவணங்கள் வழங்கியுள்ளன. அதில் ஐந்து உறுதிமொழிகள் தற்போது ‘நிறைவேற்றப்பட்டது’ என்றும் ஒன்று – வரி வருவாய் இலக்கு – ‘நிறைவேற்றப்படவில்லை’ என்றும் மறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் இறுதிக்குள் எதிர்பார்க்கப்பட்ட 73 உறுதிமொழிகளில் 12 ‘நிறைவேற்றப்படவில்லை’, 15 ‘அறியப்படாதவை’ என்றும், மேலும் 46 ‘நிறைவேற்றப்பட்டவை’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய உறுதிமொழிகளில் 63% நிறைவேற்றப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இலங்கையின் ஒட்டுமொத்த செயல்திறன் ஈர்க்கக்கூடியதை விட குறைவாகவே உள்ளது.

இரண்டாம் தவணைக்கான வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது 

செப்டம்பர் மாத முதல் பகுதியில், எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தின் இரண்டாவது தவணையான சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதிய சபை (டிசம்பர் 12) வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. இரண்டாம் தவணை கட்டணத்தை வழங்க சர்வதேச நாணய நிதிய சபையின் ஒப்புதலுக்கான கோரிக்கையிலிருந்து வெளிவரக்கூடிய திருத்தப்பட்ட உறுதிமொழிகள் மற்றும் காலக்கேடு தொடர்பான விபரங்களுடன் இக்கருவி புதுப்பிக்கப்படும்.

IMF கண்காணிப்பான் என்பது இலங்கையின் 17வது சர்வதேச நாணய நிதியத் திட்டத்தில் IMFக்கான இலங்கையின் விருப்பக் கடிதத்துடன் பதிவுசெய்யப்பட்டு அடையாளம் காணப்பட்ட 100 உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் தளமாகும். இதை வெரிட்டே ரிசர்ச்சின் manthri.lk இணையதளத்தினூடாக பொதுமக்கள் அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Visited 13 times, 1 visit(s) today

Last modified: April 29, 2024

Close